search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுப்புரம் கொள்ளை"

    • வீட்டில் கத்தி முனையில் 20 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லியோ ராஜேஷ். அவரது மனைவி சித்ரகுமாரி (வயது48).

    இவர் பாதிராப்புளியூர் அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வருகின்றார்.

    நேற்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டுக்கு 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. அவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர்.

    பின்னர் வீட்டின் பின்பக்கமாக உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் சித்ரகுமாரி அணிந்திருந்த 15 பவுன் நகை, அவரது மகள் கிருத்திகா(22) அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சல் போட்டனர். உடேன அந்த கும்பல் அவர்களை கத்தியை காட்டி மிரட்டியது. அதனை தொடர்ந்து அந்த கும்பல் பீரோவில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

    இதுகுறித்து மயிலம் போலீசாருக்கு சித்ரகுமாரி தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வர வைக்கப்பட்டது. அது பல இடங்களில் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை . மேலும் கைரேகை நிபுணர்கள் செல்வராஜ், சிராஜுதீன் மற்றும் போலீசார் கைரேகை சேகரித்து வருகின்றனர்.

    சம்பவ இடத்தை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் திண்டிவனம் ஏ .எஸ். பி. அபிஷேக் குப்தா ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் கத்தி முனையில் 20 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2-ந் தேதி சின்னச்சாமி குடும்பத்துடன் மதுரை சென்றார்.
    • சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    கண்டமங்கலம்:

    மதுரையை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் அருகே கண்டமங்கலம் போலீஸ் சரகம் சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரில் சொந்தமாக வீடு கட்டி குடியேறினார்.

    அங்கிருந்து வத்தல், வடகம் செய்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தார். கடந்த 2-ந் தேதி சின்னச்சாமி குடும்பத்துடன் மதுரை சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணம், எல்.இ.டி. டி.வி., ஹோம் தியேட்டர், பித்தளை பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை சின்னச்சாமி ஊருக்கு திரும்பினார். அப்போது தனது வீட்டின் கதவு திறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, ரூ.1 லட்சம் ரொக்க பணம் மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் கொள்ளை போனதை கண்டு பதறி போனார்.

    இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்ன சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடராஜன் தனக்குரிய பணத்தை வீட்டில் டிரங்க்பெட்டியில் பூட்டி வைத்திருந்தார்.
    • கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் டிரங்க்பெட்டியை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் அருகே கிளியனூர் போலீஸ் சரகம் காட்ராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 70). ஓய்வுபெற்ற தபால் ஊழியரான இவர் காட்ராம்பாக்கம் மெயின் ரோட்டில் எடை மேடை நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.

    அவரது மனைவி ராணியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். நடராஜன் காட்ராம்பாக்கத்தில் தோட்டத்து வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இவர் தனக்குரிய பணத்தை வீட்டில் டிரங்க்பெட்டியில் பூட்டி வைத்திருந்தார். நேற்று இரவு நடராஜன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரம் மர்மநபர்கள் வீட்டின் தோட்டம் வழியாக வந்தனர். அங்குள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் டிரங்க்பெட்டியை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை எழுந்த நடராஜன் டிரங்க்பெட்டி திறந்துகிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த பெட்டியை பார்த்த போது, அதில் இருந்த ரூ.17 லட்சம் பணம், 13 பவுன் நகை கொள்ளைபோனது கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து கிளியனூர் போலீசில் நடராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ×